/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : ராஜாம்புலியூர் கிராம மக்கள் புகார்வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : ராஜாம்புலியூர் கிராம மக்கள் புகார்
வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : ராஜாம்புலியூர் கிராம மக்கள் புகார்
வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : ராஜாம்புலியூர் கிராம மக்கள் புகார்
வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : ராஜாம்புலியூர் கிராம மக்கள் புகார்
ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
செஞ்சி : ராஜாம்புலியூர் ஊராட்சியில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.
வல்லம் ஒன்றியம் ராஜாம்புலியூர் ஊராட்சியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் கிராம மக்கள் முதல்வர் ஜெ.,வுக்கு அனுப்பியுள்ள புகார் மனு: கடந்த ஆண்டு நடந்த கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பச்சையப்பன், குமாரி ஆகியோர் ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளை முறைகேடாக சேர்த்துள்ளனர். அனைத்து பயனாளிகளிடமும் ஆயிரம் ரூபாய்வரை பணம் வாங்கி உள்ளனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் பெயரில் பணம் எடுத்துள்ளனர். சத்துணவு அமைப்பாளர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகளை ஸ்டாக் ரூமில் வைக்காமல் வீட்டிற்கு எடுத்து சென்று விடுகிறார். இது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இப்புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக வல்லம் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


