ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் டி.எம்., பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக் வரவேற்றார். துணை ஆளுநர் முத்துசாமி துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் சுனில் தலைமையிலான குழுவினர் பொதுமக்கள் 650 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 245 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு அழைத் துச் செல்லப்பட்டனர். ரோட்டரி முன்னாள் தலைவர்கள் முத்துகருப்பன், அருணாசலம், செந்தில், சங்கரன், சவரியம்மாள், மூர்த்தி, வெங்கடநாராயணன் கலந்து கொண் டனர். ரபீக் நன்றி கூறினார்.


