/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தென்கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்தென்கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
தென்கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
தென்கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
தென்கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
ADDED : ஜூலை 14, 2011 12:12 AM
கள்ளக்குறிச்சி : தென்கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அஞ்சலம், கூட்டுறவு வங்கிகளுக்கு களப் பயணம் மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் குழந்தை மைய இணைப்பு பயிற்சி மூலம் மாணவ மாணவிகளுக்கு அனுபவக் கல்வி அளிக்கப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் கபிலன், ஆசிரியைகள் ஷீலா, கனகவள்ளி, கவிதா, வள்ளிகொடியாள் ஆசிரியர்கள் ராஜா, நடராஜன் சுழற்சி முறையில் மாணவர்களை அஞ்சலம், கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை, வழிபாட்டுத் தலங்களுக்கு களப் பயணம் அழைத்து சென்றனர்.
அஞ்சலக செயல்பாடுகள், முத்திரை இடுதல், கடித பட்டுவாடா, அஞ்சலம் மூலம் பணம் அனுப்புதல், சேமிப்பு வங்கி கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, கூட்டுறவு வங்கி மூலம் நியாய விலைக் கடை நடத்துதல், கடன் வழங்குதல், வங்கி வைப்பு நிதி செயல் படுத்துதல் குறித்து அஞ்சலக கிளை அதிகாரி தீபா, கூட்டுறவு வங்கி காசாளர் நாகேஷ் விளக்கமளித்தனர்.


