/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
ADDED : ஜூலை 14, 2011 12:12 AM
விழுப்புரம் : மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலச் சங்க கலந்துரையாடல் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு அரசு கேபிள் 'டிவி' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் சுந்தர் ராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வாசு, மதுரை மாவட்ட ஒருங்கிணைபாளர் ஐயப்பன், அனிஷ்பாபு முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கோவை யுவராஜ் கலந்து கொண்டு, ஆக., 15ம் தேதி துவங்கவுள்ள அரசு கேபிள் 'டிவி' இணைப்பு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு வழங்குவது பற்றி கலந்துரையாடினார். தமிழகம் முழுவதும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாக அரசு வழங்க வேண்டும். அரசு கேபிள் 'டிவி' மூலம் டிஜிட்டல் முறையில் சேனல்கள் வழங்க வேண்டும். மாவட்டந்தோறும் அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சூரி, செந்தில் வைரவன், பாலமுருகன், முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாஸ் நன்றி கூறினார்.


