/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/நுகர்வோர் பாதுகாப்புக்குழு சிறப்பு செயற்குழு கூட்டம்நுகர்வோர் பாதுகாப்புக்குழு சிறப்பு செயற்குழு கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்புக்குழு சிறப்பு செயற்குழு கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்புக்குழு சிறப்பு செயற்குழு கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்புக்குழு சிறப்பு செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 14, 2011 12:12 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு
நுகர்வோர் பாதுகாப்புகுழு சிறப்பு செயற்குழு கூட்டம் டாக்டர் மணி
தலைமையில் நடந்தது.
வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்
சதாசிவம் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன்,
வைத்தியநாதன், சேகர், கலா, சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர். அனைத்து
பள்ளிகளிலும் பாகுபாடு பார்க்காமல் அரசு மூலம் அனைத்து மாணவர்களுக்கும்
சைக்கிள், லேப்- டாப் வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி அண்ணாதுரை சிலை
அருகில் கலைக் கல்லூரி துவங்கப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி மூன்று
சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். வங்கிகளில் நிபந்தனையின்றி கல்வி
கடன் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் சூரிய மின் ஒளி
விளக்குகள் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


