ADDED : ஜூலை 14, 2011 12:12 AM
சின்னசேலம் : சின்னசேலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மோகன் குருக்கள் மகா தீபாரதனை செய்தார். தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் அசலகுசாலாம்பிகை சமேத பஞ்சாட்ச நாதர் கோவில், பெரியநாயகி உடனான சொர்ணபுரீஸ்வரர் கோவில், குரால் புனேஸ்வரி சமேத புவனேஸ்வர் கோவில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.


