Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆசிரியர் கல்விக்கான 2ம் நாள் கவுன்சலிங் பிறமொழி மாணவர் 91 பேருக்கு ஆணை

ஆசிரியர் கல்விக்கான 2ம் நாள் கவுன்சலிங் பிறமொழி மாணவர் 91 பேருக்கு ஆணை

ஆசிரியர் கல்விக்கான 2ம் நாள் கவுன்சலிங் பிறமொழி மாணவர் 91 பேருக்கு ஆணை

ஆசிரியர் கல்விக்கான 2ம் நாள் கவுன்சலிங் பிறமொழி மாணவர் 91 பேருக்கு ஆணை

ADDED : ஜூலை 14, 2011 12:18 AM


Google News

திருச்சி: திருச்சியில் நடந்து வரும் ஆசிரியர் கல்வி பட்டயப்பயிற்சி சேர்க்கைக்கான, மாநில அளவிலான இரண்டாம் நாள் கவுன்சலிங்கில், பிறமொழி பயிலும் மாணவர் 91 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இரண்டாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்பயிற்சி வகுப்புச் சேர்க்கைக்கான, ஒற்றைச்சாளர முறை கவுன்சலிங், திருச்சியில் கடந்த 11ம் தேதி துவங்கியது. திருச்சி ஆர்.சி., மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், முதல்நாள் நடந்த கவுன்சலிங்கில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப்பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்த 100 நூறுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 77 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்றும் சிறப்புப்பிரிவுக்கான கவுன்சலிங் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் 127 பேர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 133 பேர், விடுதலை வீரர் வாரிசுகள் 10 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 180 பேரில், 141 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, நேற்று திருச்சி ஆர்.சி., பள்ளியில், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மற்றும் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் பயிலும் மாணவருக்கு கவுன்சலிங் நடந்தது. தெலுங்குப்பாட மாணவர் 70 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 52 பேர்களில் 47 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. ஆங்கிலப்பாட மாணவர் 20 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற ஆறு பேர்களில் மூன்று பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. உருதுப்பாடப்பிரிவில் ஆண்கள் ஆறு பேருக்கும், பெண்கள் 40 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் பங்கேற்ற ஐந்து பேரில் நான்கு பேருக்கும், பெண்கள் பிரிவில் பங்கேற்ற 34 பேருக்கும், மலையாளம் பிரிவில் பங்கேற்ற மூன்று பேருக்கும் ஆணை வழங்கப்பட்டது. இன்று (14ம் தேதி) முதல், திருச்சி ஆர்.சி., மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், தொழில்பாடப்பிரிவு மாணவருக்கும், சுந்தர் நகர் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், அறிவியல் பாடப்பிரிவு மாணவருக்கும், பிராட்டியூர் ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், கலைப்பாடப்பிரிவு மாணவருக்கும், 23ம் தேதி வரை தொடர்ந்து கவுன்சலிங் நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us