/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தேசியக்கல்லூரி மாணவர்களின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணிதேசியக்கல்லூரி மாணவர்களின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
தேசியக்கல்லூரி மாணவர்களின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
தேசியக்கல்லூரி மாணவர்களின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
தேசியக்கல்லூரி மாணவர்களின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 14, 2011 12:21 AM
திருச்சி: திருச்சி தேசியக்கல்லூரியில், தேசிய விமானப்பிரிவு மாணவர் படை சார்பில், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் அன்பரசு பேரணியை துவக்கி வைத்து பேசியபோது, ''புகையிலையினால் புற்றுநோய் உள்பட பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. அதனால், புகையிலை தொடர்பான எந்த பழக்கத்துக்கும் அடிமையாகக்கூடாது,'' என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக தேசிய விமானப்பிரிவு மாணவர் படை சார்ஜன்ட் பிரேம்குமார் உறுதிமொழி வாசிக்க, 'புகையிலையை எதிர்ப்போம்' என அனைத்து மாணவரும் உறுதி எடுத்துக் கொண்டனர். கல்லூரி விமானப்பிரிவு மாணவர் படை அதிகாரி ஃப்ளைட் லெப்டினன்ட் சுந்தரராமன் தலைமையில் கல்லூரியில் கிளம்பிய பேரணி, அரிஸ்டோ ஓட்டல், ரயில்வே ஜங்ஷன், தலைமை போஸ்ட் ஆஃபிஸ், விக்னேஷ் ஓட்டல் வழியாக கல்லூரியை சென்றடைந்தது. பேரணியில், மாணவர் அனைவரும் புகையிலைக்கு எதிரான தட்டிகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தனர்.


