/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் கிராம மக்கள் பயன்பெற அழைப்புகால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் கிராம மக்கள் பயன்பெற அழைப்பு
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் கிராம மக்கள் பயன்பெற அழைப்பு
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் கிராம மக்கள் பயன்பெற அழைப்பு
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் கிராம மக்கள் பயன்பெற அழைப்பு
ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
துறையூர்: துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் நேற்று (13ம் தேதி) துவங்கி ஜூலை 29ம் தேதி வரை நடக்கும் கால்நடை தடுப்பூசி முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு நோய் வராமல் தடுக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடுவதற்காக உப்பிலியபுரம் கால்நடை மருந்தக பகுதிகளில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி நடத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருச்சி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அக்பர் அலி அறிவுரைப்படி முசிறி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் மகாலிங்கம் தலைமையில் உப்பிலியபுரத்தில் நடந்தது.
கூட்டத்தில், டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் சுமதி, செல்வராணி, பஞ்சாயத்து தலைவர்கள், உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாம் தொடர்பான நோட்டீஸ் அச்சிட்டு தர லயன்ஸ் சங்கத்தினர் ஒப்புதல் தந்தனர். கூட்டத்தில், கால் மற்றும் வாய் நோய் பற்றியும் அதை தடுக்க தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் குறித்து டாக்டர் சந்திரசேகரன் பேசினார். நேற்று பூதக்கால், கருவங்காடு, நச்சிலிப்பட்டி கிராமத்தில் கால்நடைக்கான தடுப்பூசி முகாம் நடந்தது. இன்று(14ம் தேதி) புத்தூர், குண்டகாடி, நாளை புடலாத்தி, மங்கப்பட்டி, டாப்செங்காட்டுப்பட்டி, 16ம் தேதி காந்திபுரம், மங்கப்பட்டி புதூர், கம்பூர், 18ம் தேதி வெங்கடாசலபுரம், பாதர்பேட்டை, சித்தூர், பெரும்பரப்பு, 19ம் தேதி உப்பிலியபுரம், முருங்கப்பட்டி, கானாபாடி, 20ம் தேதி சோபனாபுரம், வெள்ளாளப்பட்டி, சேம்பூர், லட்சுமணபுரத்தில் நடக்கிறது. வரும் 21ம் தேதி ஓசரப்பள்ளி, சூக்லாம்பட்டி, 22ம் தேதி மாராடி, நாகநல்லூர், 23ம் தேதி கோ, பாளையம், முத்தையாபாளையம், கருங்காடு, 25ம் தேதி வலையப்பட்டி, ராசாபாளையம், செட்டிக்காடு, 26ம் தேதி வி.சமுத்திரம், பசலி கோம்பை, ஏரிக்காடு ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. வரும் 27ம் தேதி பாலகிருஷ்ணம்பட்டி, வைரிசெட்டிப்பாளையம், 28ம் தேதி மேட்டூர், கொப்பம்பட்டி, 29ம் தேதி ஈச்சம்பட்டி கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாம்களில் கிராம மக்கள், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு பயனடைய கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், கொப்பம்பட்டி டாக்டர் மதி, டாப் செங்காட்டுப்பட்டி டாக்டர் ஜீவானந்தம் பங்கேற்றனர். உப்பிலியபுரம் மருத்துவர் பெரியசாமி கூட்ட ஏற்பாடுகளை செய்தார்.


