/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலையில் குப்பை குவியல் இளைஞர்கள் அகற்றினர்சாலையில் குப்பை குவியல் இளைஞர்கள் அகற்றினர்
சாலையில் குப்பை குவியல் இளைஞர்கள் அகற்றினர்
சாலையில் குப்பை குவியல் இளைஞர்கள் அகற்றினர்
சாலையில் குப்பை குவியல் இளைஞர்கள் அகற்றினர்
ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் மக்கள் சேவை இயக்கம் சார்பில் இளைஞர்கள் சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர்.நெட்டப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, கோயில் வளாகம், மந்தைவெளி திடல் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடந்தது.
செடி கொடிகள் வளர்ந்து சாலைகளை முகம் சுளிக்க வைத்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனால், நெட்டப்பாக்கத்தில் இயங்கி வரும் மக்கள் சேவை இயக்கம் சார்பில் 30 இளைஞர்கள் ஒன்று திரண்டு தெருக்களில் இருந்த குப்பைகளை தனியார் வண்டி மூலம் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டனர்.


