/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கண்ணகி பள்ளி நுழைவு வாயில் பள்ளத்தால் மாணவிகள் சிரமம்கண்ணகி பள்ளி நுழைவு வாயில் பள்ளத்தால் மாணவிகள் சிரமம்
கண்ணகி பள்ளி நுழைவு வாயில் பள்ளத்தால் மாணவிகள் சிரமம்
கண்ணகி பள்ளி நுழைவு வாயில் பள்ளத்தால் மாணவிகள் சிரமம்
கண்ணகி பள்ளி நுழைவு வாயில் பள்ளத்தால் மாணவிகள் சிரமம்
ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
வில்லியனூர் : கண்ணகி மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மாணவிகள் சிரமத்துடன் செல்கின்றனர்.வில்லியனூர் கண்ணகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தில் கஸ்தூரிபா காந்தி மகளிர் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.விழுப்புரம் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்தது. அப்போது மெயின் ரோட்டில் இருந்து கண்ணகி பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் மீது கான்கிரீட் பாலம் அமைத்து கொடுத்தனர்.இந்த பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சைக்கிளில் செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்துடன் செல்கின்றனர். நேற்று முன்தினம் பைக்கில் பள்ளிக்கு வந்த ஆசிரியை பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.மெயின் ரோட்டில் இருந்து கண்ணகி பள்ளிக்கு செல்லும் சாலையின் வலது புறத்தில் உள்ள வீடுகளின் கழிவுநீர் பள்ளிக்கு செல்லும் சாலையை கடந்து செல்கிறது. இதனால் மாணவியர் கழிவுநீர் மீது நடந்து செல்கின்றனர்.எனவெ மாணவியர் நலன் கருதி பழுதாகி உள்ள பாலத்தையும், பள்ளிக்கு செல்லும் சாலையை கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சரிசெய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


