ADDED : ஜூலை 14, 2011 12:31 AM
புதுச்சேரி : கதிர்காமம் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான ஆய்வுப் பணி நடந்து வருகிறது.வழுதாவூர் சாலை -கோரிமேடு சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக சர்வே எடுக்கும் பணி நடந்தது வருகிறது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ராஜிவ் சிலை வரையில், ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சாலையின் மேடு பள்ளங்கள், நீரோட்டம் உள்ளிட்டவை குறித்து சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.


