/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அடிக்கடி மக்கர் செய்யும் டிராபிக் சிக்னல் சிக்கலில் மாட்டும் வாகன ஓட்டிகள்அடிக்கடி மக்கர் செய்யும் டிராபிக் சிக்னல் சிக்கலில் மாட்டும் வாகன ஓட்டிகள்
அடிக்கடி மக்கர் செய்யும் டிராபிக் சிக்னல் சிக்கலில் மாட்டும் வாகன ஓட்டிகள்
அடிக்கடி மக்கர் செய்யும் டிராபிக் சிக்னல் சிக்கலில் மாட்டும் வாகன ஓட்டிகள்
அடிக்கடி மக்கர் செய்யும் டிராபிக் சிக்னல் சிக்கலில் மாட்டும் வாகன ஓட்டிகள்
தென்காசி : தென்காசியில் அடிக்கடி மக்கர் செய்யும் டிராபிக் சிக்னலால் வாகன ஓட்டிகள் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகியுள்ளது.தென்காசி நகராட்சி பகுதியில் போக்குவரத்தை சீரமைப்பதற்காக யானைப்பாலம், குருநாதவைத்தியசாலை, நடுபெட்ரோல் பங்க் உள்ளிட்ட மூன்று இடங்களில் டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் லைட் எரிந்த பிறகு சற்று தொலைவில் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என டிராபிக் சிக்னல் பற்றி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த சிக்னல் லைட்டுகள் திடீரென மக்கர் செய்கின்றன. ஒரே நேரத்தில் சிகப்பு மற்றும் பச்சை லைட் எரியும் நிலை ஏற்படுகிறது.இதனை கண்டு வாகன ஓட்டிகள் செல்வதா, செல்ல வேண்டாமா? என சிக்கலில் மாட்டி திகைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க டிராபிக் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


