Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டி

தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டி

தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டி

தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டி

ADDED : ஜூலை 14, 2011 01:37 AM


Google News

சேலம்: சேலத்தில், தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் நேற்று துவங்கியது.

சேலம், மகாத்மாகாந்தி மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில், நேற்று, தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் துவங்கியது. ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளி முதல்வர் வர்க்கீஸ், போட்டிகளை துவக்கி வைத்தார். சேலம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் மாணிக்கம், சேலம் நோட்டரி ஹோலிகிராஸ் பள்ளி நிர்வாக அலுவலர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக தேக்வாண்டோ சங்க துணைத் தலைவர் பாபா விவேக் ஆனந்த், சேலம் மண்டல உடற்பயிற்சி கல்வி ஆய்வாளர் ராபர்ட் கிரிஸ்டபர், சேலம் எஸ்.வி., கிளப் வேலாயுதம், சாய் தேக்வாண்டோ கோச் அமரேந்திர புருஸ்டி உள்பட பலர் பங்கேற்றனர். தேக்வாண்டோ போட்டியில், தமிழகத்தின் சார்பில், சேலத்தை சேர்ந்த 26 பேர், கர்நாடகா சார்பில் பெங்களூருவில் இருந்து 18 பேர், கார்வார்டில் இருந்து 11 பேர், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 16 பேர், ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து 16 பேர் கலந்து கொண்டனர். இன்று மாலை நிறைவு போட்டி நடக்கிறது. இரண்டு நாள் நடக்கும் போட்டியில், சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் தென்னிந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளில் ஆடவர், மகளிர் என தனித்தனியாக போட்டி நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us