ADDED : ஜூலை 14, 2011 01:38 AM
நாமக்கல்: 'நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில்.
வரும் 19ம் தேதி கெண்டை மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது' என, வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளிட்ட அறிக்கை: பயிற்சியில் கெண்டை மீன் வளர்ப்பின் முக்கியத்துவம், மீன் வளர்ப்புக்கான இடம் தேர்வு செய்தல், மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், தீவன மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியில், ஊரக மகளிர், விவசாயிகள் என அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்புபவர்கள், மோகனூர் சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 04286-266345, 266244, 266650 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


