/உள்ளூர் செய்திகள்/சேலம்/கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு 5 மாதத்தில் ரூ.134 உயர்ந்ததால் வர்த்தக நிறுவனங்கள் பாதிப்புகமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு 5 மாதத்தில் ரூ.134 உயர்ந்ததால் வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு
கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு 5 மாதத்தில் ரூ.134 உயர்ந்ததால் வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு
கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு 5 மாதத்தில் ரூ.134 உயர்ந்ததால் வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு
கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு 5 மாதத்தில் ரூ.134 உயர்ந்ததால் வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 14, 2011 01:38 AM
சேலம்: ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டரின் விலை நேற்று மேலும், 24 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டது.
ஐந்து மாதத்தில், 134 ரூபாய் வரை அதிகரித்திருப்பது, வர்த்தக நிறுவனங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் என, இரண்டு வகையான சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டருக்கு, மத்திய அரசு, 180 ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை, ஒரு ஆண்டாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், 1,240 ரூபாய்க்கு சப்ளை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை, ஏப்ரல் மாதத்தில், 1,270 ரூபாயாகவும், மே மாதத்தில், 1,330 ரூபாய்க்கும் சப்ளை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம், 20 ரூபாயும், நேற்று, 24 ரூபாயும் அதிகரித்து, 1,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஐந்து மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு, 134 ரூபாய் வரை அதிகரித்து இருப்பது வர்த்தக நிறுவனங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறு கடைகள், ஹாட்டல்கள், கார்களில் வீட்டுக்கு பயன் படுத்தப்படும் சிலிண்டரை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை வெளி மார்கெட்டில், 600 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாக அதிகரித்துள்ளது. காஸ் ஏஜென்ஸியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தை காரணம் காட்டி, பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிப்பு செய்யப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள் வர்த்தக சிலிண்டர்களுக்கான விலையை அதிகரிப்பு செய்துள்ளதால், தனியார் நிறுவனங்களும் அதிகரிப்பு செய்துள்ளன. இந்த உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். தனியார் சிலிண்டர் விலையும் கிடு கிடு ஸ்பீக் ஜோதி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில், 17 கிலோ எடை கொண்ட சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. ஆயில் நிறுவனங்களின் வர்த்தக சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தனியார் நிறுவனங்களின் சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், 980 ரூபாய்க்கும், ஏப்ரல் மாதம், 1,006 ரூபாய்க்கும், மே மாதம், 1,031 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை, 107 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு, 1,138 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஐந்து மாதத்தில் மட்டும் சிலிண்டருக்கு, 158 ரூபாய் வரை தனியார் சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.


