/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோவில் கட்டுவதில் பிரச்னை வருவாய்த்துறை பேச்சுவார்த்தைகோவில் கட்டுவதில் பிரச்னை வருவாய்த்துறை பேச்சுவார்த்தை
கோவில் கட்டுவதில் பிரச்னை வருவாய்த்துறை பேச்சுவார்த்தை
கோவில் கட்டுவதில் பிரச்னை வருவாய்த்துறை பேச்சுவார்த்தை
கோவில் கட்டுவதில் பிரச்னை வருவாய்த்துறை பேச்சுவார்த்தை
ADDED : ஜூலை 14, 2011 01:41 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பல் கிராமத்தில், கோவில் கட்டுவதில் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பல் மலை கிராமத்தில், பழைய மாரியம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணி மேற்கொண்டனர். அப்போது, பள்ளி வாசலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து, கட்டுமான பணி மேற்கொண்டதாக தெரிகிறது. அது பற்றி மற்றொரு தரப்பினர் கேட்டதால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக, ஆத்தூர் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், நேற்று ஆத்தூர் தாசில்தார் (பொறுப்பு) சாந்தி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், வாழப்பாடி டி.எஸ்.பி., ராஜன் ஆகியோர், இரு தரப்பினரிøடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுபாதையில், 12 அடி அகலம் பாதைக்கும், 6 அடி மாரியம்மன் கோவில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.


