/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறு, குறு விவசாயிகள் விபரங்கள் சேகரிப்புசிறு, குறு விவசாயிகள் விபரங்கள் சேகரிப்பு
சிறு, குறு விவசாயிகள் விபரங்கள் சேகரிப்பு
சிறு, குறு விவசாயிகள் விபரங்கள் சேகரிப்பு
சிறு, குறு விவசாயிகள் விபரங்கள் சேகரிப்பு
ADDED : ஜூலை 14, 2011 09:29 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் வேளாண் துறை மூலம் சிறு
மற்றும் குறு விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கும் பணி இன்று துவங்குகிறது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை: வடக்கு
ஒன்றியத்தில் சிறு, குறு விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயின் பெயர், முகவரி, வயது, மொபைல்போன் எண்,
வங்கி கணக்கு எண், கல்வி தகுதி, நில அளவை எண், பரப்பு, பயிரிடப்பட்டுள்ள
சாகுபடி விபரம், நீர் ஆதார விபரம், பண்ணைக்கருவிகள், கால்நடைகளின்
எண்ணிக்கை, தற்போது விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், இதர தொழில்
வருவாய் ஆகிய புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படும். தற்போது பெறப்படும் வேளாண்
உற்பத்தி மற்றும் வருமானத்தை இரண்டு மடங்காக பெருக்க விவசாயிகளிடம்
இருந்து ஆலோசனைகளும், புள்ளி விபரங்களும் சேகரிக்கப்படும். புள்ளி
விபரங்கள் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களால் கிராமத்திற்கு நேரில்
வந்து சேகரிக்கப்படும். வடக்கு ஒன்றியத்தில் இன்று 15ம் தேதி விவசாயிகள்
சந்திப்பு துவங்குகிறது. வரும் 30ம் தேதி வரையிலும் ஒவ்வொரு கிராமமாக
விவசாயிகளை சந்தித்து புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. விவசாயிகள்
தேவையான விபரங்களையும், ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


