/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/முதுமலையில் 200 ஹெக்டரில் மூங்கில் விதை :யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கைமுதுமலையில் 200 ஹெக்டரில் மூங்கில் விதை :யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை
முதுமலையில் 200 ஹெக்டரில் மூங்கில் விதை :யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை
முதுமலையில் 200 ஹெக்டரில் மூங்கில் விதை :யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை
முதுமலையில் 200 ஹெக்டரில் மூங்கில் விதை :யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை
ADDED : ஜூலை 14, 2011 10:37 PM
கூடலூர் : முதுமலையில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் எதிர்கால உணவு தேவையை
பூர்த்தி செய்யும் வகையில், 200 ஹெக்டர் பரப்பளவில் 500 கிலோ மூங்கில்
விதைகளை வனத்துறையினர் விதைத்தனர். யானைகளின் முக்கிய உணவான மூங்கில்களில்
நடவு செய்த 40 ஆண்டுகளுக்கு பின்பு பூ பூத்து முழுமையாக அழிந்து விடுவது
வழக்கம். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் முதுமலை புலிகள்
காப்பகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவிலான மூங்கில்களில் பூ பூத்து அவை
அரிசியாக மாறி உதிர்ந்து அழிந்து விட்டன. மூங்கில்கள் பெருமளவில் குறைந்து
விட்டதால், யானைகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யானைகள்
உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதும், விவசாய நிலங்களின்
புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துவம் தொடர்கிறது. முதுமலை சுற்றுப்புற
பகுதிகளில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு மூங்கில்கள்
உள்ளன. இந்த மூங்கிலும் குறைந்து விட்டால், எதிர்காலத்தில் உணவுக்காக,
யானை- மனித மோதல்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
யானைகளின் எதிர்கால மூங்கில் தேவைக்கான பணிகளை முதுமலை புலிகள் காப்பகம்
மேற்கொண்டு வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை சார்பில் 200
ஹெக்டர் பரப்பளவில் 500 கிலோ மூங்கில் விதைகள் (மூங்கில் நெல் )
விதைக்கப்பட்டுள்ளன. 'இவை 10 ஆண்டுகளில் ஓரளவு வளர்ச்சி பெற்று யானைகளின்
உணவு தேவையை பூர்த்தி செய்யும்,' என எதிர்பார்க்கப்படுகிறது. முதுமலை
புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர்ஹாஜா கூறுகையில்,''மூங்கில் பெருமளவில்
சாய்ந்து விட்டதால் எதிர் காலத்தில் யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய
முதுமலையில் மூங்கில் நெல்களை விதைக்கும் பணிகள் 200 ஹெக்டர் பரப்பில்
நடந்துள்ளது. இதன் பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.


