/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீனவப் பகுதிகளில் போலி, வெளி மாநில மதுபானங்கள் சிக்கியதுமீனவப் பகுதிகளில் போலி, வெளி மாநில மதுபானங்கள் சிக்கியது
மீனவப் பகுதிகளில் போலி, வெளி மாநில மதுபானங்கள் சிக்கியது
மீனவப் பகுதிகளில் போலி, வெளி மாநில மதுபானங்கள் சிக்கியது
மீனவப் பகுதிகளில் போலி, வெளி மாநில மதுபானங்கள் சிக்கியது
பொன்னேரி : மீனவப் பகுதிகளில் போலீசார், அதிரடி சோதனை நடத்தியதில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த, போலி மற்றும் வெளி மாநில மதுபானங்கள் சிக்கியது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், ஜூன் மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து, உள்ளூர் போலீசார், மீனவப் பகுதிகளில் சோதனையிட்டு இருவரை கைது செய்தனர். ஒரு சில பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். ஆனால், மீனவப் பகுதிகளில் போலி மற்றும் வெளி மாநில மது விற்பனை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை மாதவரம் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில், 30 பேர் கொண்ட தனிப்படை போலீசார், மாறுவேடத்தில், பழவேற்காடு மீனவ கிராமங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கூனங்குப்பம், வைரவன்குப்பம், அரங்கம், லைட்அவுஸ்குப்பம், கரிமணல் உள்ளிட்ட, 14 மீனவ கிராமங்களில் சோதனையிட்டனர். அப்பகுதிகளில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த, வெளிமாநில மதுபானங்கள் மற்றும் தரம் குறைந்த, 1,700 குவார்ட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அரங்கம் வண்டிகுமார், 34, பழவேற்காடு கார்த்திக், 35, ஆகிய இருவரை கைது செய்தனர்.பொன்னேரி சப் - டிவிஷனில் உள்ள பகுதிகளுக்கு, பொன்னேரி கலால் பிரிவு போலீஸ் நிலையம், செயல்பட்டு வருகிறது. வேறு பணிகள் எதுவும் இல்லை. இருப்பினும், மீனவப் பகுதிகளில், போலி மற்றும் வெளிமாநில மதுபானங்கள் விற்பனையை தடுப்பதில், மெத்தனப் போக்கையே போலீசார் கடைபிடிக்கின்றனர். தற்போது, மாதவரம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட சோதனையில், மதுபானங்கள் சிக்கி இருப்பது, கலால் பிரிவு போலீசாரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.


