திருவள்ளூர் : ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் இலவச சுய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது தையல், கணினி, கவரிங் நகை செய்தல், எம்பிராய்டரி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக் வேலைபாடு, மொ பைல் போன் பழுது பார்த்தல், சாப்ட் பொம்மை தயாரித்தல் போன்று பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படும்.
பயிற்சிகள் குறித்து விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 2009ம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, இதுவரை 883 பேருக்கு மேற்பட்டவர்கள் சுய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இது குறித்து, மேலும் விவரங்களுக்கு 044-2769 9892 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது மேற்கண்ட முகவரியில் நேரி லோ தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவல்களை இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் உஷா ரவீந்திரன் தெரிவித்தார்.


