ADDED : ஜூலை 15, 2011 12:22 AM
மதுரை: மதுரை நகர் கன்ட்ரோல் ரூமில் ஏட்டாக இருப்பவர் ஜேசுதாஸ் கல்யாணம்.
நேற்று முன்தினம் இரவு, 10.40 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இவர் குடிபோதையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதை உறுதி செய்த கமிஷனர் கண்ணப்பன், நேற்று, ஜேசுதாஸ் கல்யாணத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.