Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரயில் கழிவறையில் பிறந்த குழந்தைதண்டவாளத்தில் தவறி விழுந்து பலி

ரயில் கழிவறையில் பிறந்த குழந்தைதண்டவாளத்தில் தவறி விழுந்து பலி

ரயில் கழிவறையில் பிறந்த குழந்தைதண்டவாளத்தில் தவறி விழுந்து பலி

ரயில் கழிவறையில் பிறந்த குழந்தைதண்டவாளத்தில் தவறி விழுந்து பலி

ADDED : ஜூலை 15, 2011 12:58 AM


Google News
பாலக்காடு:பாலக்காடு - நிலம்பூர் பாசஞ்சர் ரயில் கழிவறையில் பிறந்த குழந்தை, தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தது.பாலக்காடு - நிலம்பூர் பாசஞ்சர் ரயிலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திருச்சூர் சேலக்கரையைச் சேர்ந்த கர்ப்பிணி, சொர்ணூருக்கு சென்றுகொண்டிருந்தார். ஒலவக்கோடு ஸ்டேஷனை கடந்தவுடன், கழிவறைக்கு சென்ற கர்ப்பிணிக்கு, குழந்தை பிறந்தது. அவர் மயக்க நிலையில் இருந்ததால், பிறந்த குழந்தை கழிப்பிட துவாரம் வழியாக ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது ரயில் பாலக்காடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தது. ரயில் புறப்பட்டவுடன், பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் பச்சிளம்குழந்தை கிடப்பதைப் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ரயில்வே போலீசார் குழந்தையை மீட்டு, பாலக்காடு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சையின்போது குழந்தை இறந்தது. குழந்தை எடை மிகக்குறைவாக இருந்ததால், காயத்தை தாங்கும் சக்தியை இழந்ததாக டாக்டர்கள் கூறினர்.பாலக்காடு ரயில்வே போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சொர்ணூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, மகளிர் கம்பார்ட்மென்டில், குழந்தையின் தாயை கண்டுபிடித்தனர்.போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us