/உள்ளூர் செய்திகள்/சேலம்/லஞ்ச வழக்கில் சிக்கிய ஏட்டுக்கு 3 ஆண்டு சிறைலஞ்ச வழக்கில் சிக்கிய ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை
லஞ்ச வழக்கில் சிக்கிய ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை
லஞ்ச வழக்கில் சிக்கிய ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை
லஞ்ச வழக்கில் சிக்கிய ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 15, 2011 01:00 AM
சேலம்: லஞ்ச வழக்கில் சிக்கிய போலீஸ் ஏட்டுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனையும், அவருக்கு உதவியாக செயல்பட்டவருக்கு, ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
சேலம், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி, குணசேகரன் ஆகியோருக்கு இடையே, பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இப்பிரச்னை குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்த போது, அங்கு ஏட்டாக பணிபுரிந்த பழனிமுத்து, பேச்சுவார்த்தை நடத்தினார். பெரியசாமிக்கு ஆதரவாக பேச, 4,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். பெரியசாமி, 2002ம் ஆண்டு ஏட்டு பழனிமுத்து கேட்ட 4,000 ரூபாயை, போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள மருந்து கடை உரிமையாளர் ஹரிசுதனிடம் வழங்கியுள்ளார். இதை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும், களவுமாக பிடித்தனர். இவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், போலீஸ் ஏட்டு பழனிமுத்துவையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, சேலம் முதன்மை ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடந்தது. முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் செங்கோட்டையன் நேற்று தனது தீர்ப்பில், 'லஞ்சம் வாங்கியதற்காக ஏட்டு பழனிமுத்துவுக்கு, மூன்றாண்டு சிறையும், 2,500 ரூபாய் அபராதமும், ஹரிசுதனுக்கு ஓராண்டு சிறையும், 1,000 ரூபாய் அபராதமும், குற்ற நடவடிக்கைகளுக்காக, பழனிமுத்துவுக்கு மூன்றாண்டு சிறையும், 2,500 ரூபாய் அபராதமும், ஹரிசுதனுக்கு ஓராண்டு சிறையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


