Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூலை 16, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

சி.பி.ஐ., இயக்குனரிடம் பா.ஜ., மனு: தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தை சி.பி.ஐ., விசாரிக்காதது ஆச்சர்யமாக உள்ளது.



டவுட் தனபாலு: இதுல என்ன ஆச்சரியம் இருக்கு...? அப்போ பிரதமரா இருந்த மன்மோகன் சிங்கை விசாரிக்கலை; கூட்டணித் தலைவரா இருந்த சோனியாவை விசாரிக்கலைன்னு, எவ்வளவோ ஆச்சரியம் இருக்கு... அவங்களை எல்லாம் விசாரிச்சா, அப்புறம் சி.பி.ஐ., இயக்குனர், அந்தப் பதவியில இருக்க முடியுமா...?



மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன்: ஜூலை 15 முதல், 21 வரையான ஒரு வார காலம், தேசமெங்கும் ஊழலுக்கெதிரான மக்கள் பங்கேற்பு இயக்கங்களை நடத்த இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.



டவுட் தனபாலு: இந்த இயக்கத்துல, கேரளாவைச் சேர்ந்த நம்ம காம்ரேட், எண்ணெய் ஊழல் புகழ் பினராயி விஜயனும் பங்கேற்பாரா...? அவருக்கும் இந்த அறைகூவல்

பொருந்தும்ல...!



பத்திரிகைச் செய்தி: சேலம், தாசநாயகன்பட்டியில், ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வீட்டை நள்ளிரவில் கண்காணிக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் அலறியடித்து ஓடியதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.



டவுட் தனபாலு: செத்த வீட்ல நடமாடி என்ன பண்றது...? நியாயமாப் பார்த்தா, கொலை குற்றம் சாட்டப்பட்டவங்க வீட்ல தானே பேய்கள் நடமாடணும்... இதை, யாராவது அந்தப் பேய்களுக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா...!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us