/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஒரே குழியை இருமுறை தோண்டும் புது டெக்னிக் : ராமநாதபுரம் நகராட்சியில்தான் இந்த கூத்துஒரே குழியை இருமுறை தோண்டும் புது டெக்னிக் : ராமநாதபுரம் நகராட்சியில்தான் இந்த கூத்து
ஒரே குழியை இருமுறை தோண்டும் புது டெக்னிக் : ராமநாதபுரம் நகராட்சியில்தான் இந்த கூத்து
ஒரே குழியை இருமுறை தோண்டும் புது டெக்னிக் : ராமநாதபுரம் நகராட்சியில்தான் இந்த கூத்து
ஒரே குழியை இருமுறை தோண்டும் புது டெக்னிக் : ராமநாதபுரம் நகராட்சியில்தான் இந்த கூத்து
ADDED : ஜூலை 15, 2011 09:54 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஒரு பணியை இரண்டு முறை செய்து எப்படி கணக்கு காட்டுவது என்பதில் பெரும் போட்டியே நடந்து வருகிறது.
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.
ஒரு வழியாக திட்டம் முடிவுக்கு வந்து, விரைவில் பயன்பாட்டிற்கு வரும், என அதிகாரிகள் கூறுகின்றனரே தவிர என்று செயல்பாட்டிற்கு வரும் என்பது புரியாத புதிர். இதுஒருபுறம் இருக்க, திட்டத்தில் எப்படியெல்லாம் இரண்டு வகையான கணக்கு காட்டலாம் என்பதில் திட்டத்தை செயல்படுத்தும் குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் கடும் போட்டியே நிலவிவருகிறது. திட்டத்திற்காக நகர் முழுவதும் ரோட்டின் நடுவே குழிகள் தோண்டப்பட்டன.
தற்போது நகராட்சி மூலம் ரோடு அமைக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் குழிகளை மூடிவிட்டனர். சில இடங்களில் மட்டும் ரோடு அமைக்கும்போது, குழிகள் தெரியும் வகையில் பெரும் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது குழிதோண்ட மீண்டும் டெண்டர் விடும் நிலை உள்ளது. ஒரே குழியை இரண்டு முறை தோண்டுவதற்காக டெண்டர் விடுவது வேறு எங்கும் இல்லாத நிலை இங்கு தான் உள்ளது. நகராட்சியில் இதுபோல் தொடரும் கூத்தால் மக்களின் வரிபணம் விரயமாகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும்.


