/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/முழு ஈடுபாடுடன் பயின்றால் லட்சியத்தில் வெற்றி நிச்சயம்முழு ஈடுபாடுடன் பயின்றால் லட்சியத்தில் வெற்றி நிச்சயம்
முழு ஈடுபாடுடன் பயின்றால் லட்சியத்தில் வெற்றி நிச்சயம்
முழு ஈடுபாடுடன் பயின்றால் லட்சியத்தில் வெற்றி நிச்சயம்
முழு ஈடுபாடுடன் பயின்றால் லட்சியத்தில் வெற்றி நிச்சயம்
ADDED : ஜூலை 17, 2011 01:28 AM
ஊட்டி : 'மாணவர்கள் எந்த துறையை விரும்புகிறார்களோ, அதை தேர்வு செய்து முழுமையான ஈடுபாடுடன் படித்தால் லட்சியத்தில் வெற்றி பெறலாம்,'என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி கிரசென்ட் மெட்ரிக் பள்ளியின் மாணவர் பேரவை பதவி பிரமாணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு மாணவ பேரவை தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசுகையில்,'' மாணவர்கள் குறிக்கோளை அறிந்து செயல்பட வேண்டும். எந்த துறையை விரும்புகிறார்களோ அந்த துறையை தேர்வு செய்து முழுமையான ஈடுபாடுடன் படித்தால் லட்சியத்தில் வெற்றி பெறலாம். பிறரின் கட்டாயத்துக்காக விரும்பமில்லாத துறையில் ஈடுபட்டால் தோல்வியே ஏற்படும். நவீன தொழில் நுட்பங்களை வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்த வேண்டும். பிறரை கண்டு பொறாமைப்படாமல் அவர்களை பாராட்டவும், ஊக்குவிக்கவும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஆசிரியர்களை விட, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். தரமான கல்வி சிறந்த இளைஞரை நம் தேசத்துக்கு உருவாக்கும்,'' என்றார். விழாவில் பள்ளி தாளாளர் பரூக், முதல்வர் ஆட்ரிக்ஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.