ADDED : ஜூலை 17, 2011 01:35 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் வேலு (50).
இவர் நேற்று முன்தினம் மாலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் சிறுவங்கூர் சென்று திரும்பினார். நீலமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது பின்னால் வந்த கள்ளக்குறிச்சியிலிருந்து வேப்பூர் சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. காயமடைந்த வேலுவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவர் சின்னசேலம் விஜயராகவனை கைது செய்தனர்.