/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தரமான பருத்தி விதைகள்பயன்படுத்த வேண்டுகோள்தரமான பருத்தி விதைகள்பயன்படுத்த வேண்டுகோள்
தரமான பருத்தி விதைகள்பயன்படுத்த வேண்டுகோள்
தரமான பருத்தி விதைகள்பயன்படுத்த வேண்டுகோள்
தரமான பருத்தி விதைகள்பயன்படுத்த வேண்டுகோள்
ADDED : ஜூலை 17, 2011 02:17 AM
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தரமான பருத்தி விதைகளை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்' என விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஜான் லூர்து சேவியர் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி,
மத்தூர் பகுதிகளில் விவசாயிகள் ஆடிப்பட்ட விதை பருவத்துக்கு பி.டி., பருத்தி விதைகளை வாங்கும் போது, விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும் விதைகளை வாங்க வேண்டும்.வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கு மிகாமல், விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டும்.தமிழகத்துக்கு பி.டி., பருத்தி விதைகளை ஒதுக்கீடு செய்யாத நிறுவனங்களின் விதைகளை, பிற மாநிலங்களில் வாங்க நேர்ந்தாலும், உரிய விதை விற்பனை ரசீதுகளை கட்டாயம் பெற்று கொள்ள வேண்டும். மேலும், வாங்கும் பி.டி., பருத்தி விதை குவியலுக்குரிய முளைப்பு திறன் பகுப்பாய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும்.விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனி முதல் குறுக்கு தெருவில் விதை பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதை பரிசோதனை நிலையத்தில், 30 ரூபாய் செலுத்தி விதைகளின் தரத்தை அறிந்து பயன்பெறலாம்.