/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கல்வி மேம்பாடுஊக்குவிப்பு பரிசுவழங்கும் விழாகல்வி மேம்பாடுஊக்குவிப்பு பரிசுவழங்கும் விழா
கல்வி மேம்பாடுஊக்குவிப்பு பரிசுவழங்கும் விழா
கல்வி மேம்பாடுஊக்குவிப்பு பரிசுவழங்கும் விழா
கல்வி மேம்பாடுஊக்குவிப்பு பரிசுவழங்கும் விழா
ADDED : ஜூலை 17, 2011 02:31 AM
பெருந்துறை: தென்னிந்திய செங்குந்தர் மகாசனம், பெருந்துறை வட்டக் கிளை
சார்பில், கல்வி மேம்பாடு ஊக்குவிப்பு மற்றும் நலிவடைந்தோர் பொருளாதார
மேம்பாட்டு விழா நடந்தது.பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டிலுள்ள ஸ்ரீவாசவி
மஹாலில், வட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜகோபால்
வரவேற்றார். பெருந்துறை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பல்லவிபரமசிவம், ஓய்வு
பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
மருத்துவப்படிப்புக்கு கட் ஆப் மார்க் 199.25 பெற்ற மாணவர் ஞானசேகரன்
மற்றும் பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்துக்கு மேல் மார்க் பெற்றவர்களுக்கும்,
எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பில் 80 சதவீதத்துக்கு மேல் மார்க் பெற்றவர்களுக்கு
ரொக்க பரிசு, சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில்
நலிவடைந்தவர்களுக்கு வேஷ்டி, சேலைகள், புரவலர்களுக்கு நினைவு பரிசு
வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி கலைசெல்வன், துணைச் செயலாளர்
செந்தில்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள்
செய்தனர்.