Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.8 கோடியில் ரோடு பணி

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.8 கோடியில் ரோடு பணி

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.8 கோடியில் ரோடு பணி

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.8 கோடியில் ரோடு பணி

ADDED : ஜூலை 19, 2011 09:47 PM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் சிறப்பு சாலை திட்டம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டத்தில் மொத்தம் எட்டு கோடியில் ரோடுகள் அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சியில், சாலை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகராட்சியில் சிறப்பு சாலை திட்டம் 6.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு வடக்கு, தெற்கு பகுதிகள் சிறப்பு சாலை திட்டத்தில் கான்கிரீட் ரோடுகளாக மாற்றப்படுகிறது. அம்பேத்கார் வீதி, ரயில்வே லைன் சந்து உள்ளிட்ட பகுதிகளின் ரோடு போடப்படுகிறது. இதற்காக ஒரு கோடியே 58 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பேத்கார் ரோடு 38 லட்சத்திலும், ராமானுஜர் வீதி 38 லட்சத்திலும், இந்திராநகர் இட்டேரி, நல்லப்பா நகர், நேரு காலனி பகுதிகளில் 50 லட்சம் ரூபாய்க்கும் ரோடு போடப்படுகிறது. உடுமலை ரோடு எல்.ஐ.ஜி., காலனி 33 லட்சத்திலும், சோமநாதபுரம், வெங்கடாசல புரம் பகுதிகள் 32 லட்சத்திலும், ஓம் சாந்தி நகர், ராஜராஜேஸ்வரி நகர் 35 லட்சத்திலும், கே.ஆர்.ஜி.பி., நகர் 35 லட்சத்திலும், குமரன் நகர் பிரதான ரோடு 23 லட்சத்திலும் ரோடு போடப்படுகிறது. நகராட்சி நிதியில் 36 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 28 இடங்களில் மொத்தம் ஒரு கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்படுகிறது. சிறப்பு திட்டங்கள் குறித்து நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ''பொள்ளாச்சி நகராட்சியில் தி.மு.க., அரசு அறிவித்த சிறப்பு சாலை திட்டத்தில் நியூஸ்கீம் ரோடு சிறந்த தரத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று 6.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சாலை திட்ட பணிகள் நடக்கிறது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் மோசமான நிலையில் உள்ள ரோடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு நிதியாக 1.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோடு அமைக்கப்படுகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ரோடு போடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நகராட்சியில் மொத்தம் எட்டு கோடியில் ரோடு போடும் பணிகள் நடக்கிறது'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us