/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்ஜினியரிங் படிக்க உதவிபொள்ளாச்சி மாணவி எதிர்பார்ப்புஇன்ஜினியரிங் படிக்க உதவிபொள்ளாச்சி மாணவி எதிர்பார்ப்பு
இன்ஜினியரிங் படிக்க உதவிபொள்ளாச்சி மாணவி எதிர்பார்ப்பு
இன்ஜினியரிங் படிக்க உதவிபொள்ளாச்சி மாணவி எதிர்பார்ப்பு
இன்ஜினியரிங் படிக்க உதவிபொள்ளாச்சி மாணவி எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 19, 2011 09:47 PM
பொள்ளாச்சி : சென்னை அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படிப்பில் சேர இடம் கிடைத்தும், பண வசதி இல்லாததால் கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி தவிப்புக்குள்ளாகியுள்ளார்.பொள்ளாச்சி அடுத்த ஆர்.
கோபாலபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரும், இவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் லாவண்யா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,166 மதிப்பெண் பெற்றுள்ளார். பொறியியல் கட்-ஆப் 195.25 பெற்றதால், கவுன்சிலிங்கில் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 'ஜியோ இன்பர்மேட்டிக்' இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.இங்கு, கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாயும், விடுதியில் தங்குவதற்கு ஆண்டுக்கு 30 ஆயிரத்து 320 ரூபாயும் சேர்த்து 45 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி சேர்க்கையின் போது கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவியின் பெற்றோரிடம் போதிய வசதியில்லாததால், கல்விக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உயர்கல்வி தொடர, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடும் முயற்சியில் மாணவி ஈடுபட்டுள்ளார்.மாணவி லாவண்யா கூறியதாவது:சிறு வயது முதலேயே படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்தேன். பெற்றோர் இருவரும் கூலி வேலை என்பதால், பள்ளி படிப்பு வரை தெரிந்தவர்களின் உதவியுடன் படித்து வந்தேன்.பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் கிடைத்ததால், கவுன்சிலிங் மூலம் அண்ணா பல்கலையிலேயே இடம் கிடைத்துள்ளது. ஆனால், படிப்பில் சேர தேவையான கட்டணத்தை கட்ட முடியாத நிலை உள்ளது. தெரிந்தவர்களிடமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் கல்வி உதவி கேட்டு வருகிறேன். உதவி தொகை கிடைத்தால், பொறியியல் படிப்பில் சேர முடியும், என்றார்.மாணவியின் பெற்றோரை 9400934698, 9688020663 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


