Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளில் தன்னம்பிக்கை கருத்தரங்கம்

பள்ளிகளில் தன்னம்பிக்கை கருத்தரங்கம்

பள்ளிகளில் தன்னம்பிக்கை கருத்தரங்கம்

பள்ளிகளில் தன்னம்பிக்கை கருத்தரங்கம்

ADDED : ஜூலை 19, 2011 09:47 PM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் 'வாய்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பு மூலம் கருத்தரங்கு நடந்தது.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்தரங்கில், அமைப்பின் மாநில செயலாளர் விஸ்வநாதர் வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கோபால்சாமி தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகி சூரியகாந்தன் பேசுகையில், ''மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. முயற்சியும், பயிற்சியும் வெற்றிக்கு அவசியம். இதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். எந்த முயற்சியையும் தன்னம்பிக்கையுடன் மேற்கொண்டால் வெற்றி நிச்சியம்'' என்றார்.இதேபோல், பொள்ளாச்சி சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் கருத்தரங்கு நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us