Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூலை 20, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி: நில மோசடி தனிப்பிரிவில், தற்போது, 90 புகார்கள் வந்துள்ளன.

புகார்கள் குறித்து தனிப்பிரிவு போலீசார் விசாரித்து, 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும், நடவடிக்கை தொடர்கிறது. மோசடியில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அவ்வப்போது மாறுவதால் உறுதியாக கூற முடியாது.



டவுட் தனபாலு: உண்மையாவே இவ்ளோ புகாரும், இவ்ளோ கைதும் தான் நடந்ததா...? இல்லை, அம்மா ஆசியோட தொடங்கப்பட்ட பிரிவு பத்தி, முதல் முறையா வாய் திறக்கிறோம்... எல்லாமே கூட்டுத்தொகை ஒன்பது வர்ற மாதிரி நல்லா இருக்கும்னு நினைச்சு சொன்னீங்களா...?



இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: மருந்தாளுனர்கள் பணியில் சேர, பல பிரிவினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. முற்பட்ட வகுப்பினருக்கு தளர்வு இல்லை. மருத்துவ சேவைக்கு வருவோரை பிற்போக்கு, முற்போக்கு என்றெல்லாம் பிரிக்க வேண்டாம். அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்தால் போதும்.



டவுட் தனபாலு: என்ன அருமையான இட ஒதுக்கீட்டுத் தத்துவம்... மருத்துவத் துறையில மட்டும், பிற்பட்டோர், முற்பட்டோர் பார்க்க வேண்டாம்; தகுதி இருந்தா போதும்... மத்த துறையில எல்லாம், பிற்பட்டோர், முற்பட்டோர் பார்க்கணும்; தகுதியே வேண்டாம்... அப்படித்தானே...!



மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: கறுப்புப் பணத்தையும், பயங்கரவாத நிதிப் பரிமாற்றங்களையும் ஒழிக்க, சர்வதேச தரத்திலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் பரிந்துரைக்கேற்ப, ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



டவுட் தனபாலு: ஆக மொத்தம் நீங்களா எதுவும் செய்ய மாட்டீங்க... உலக நாடுகள் எல்லாம் ஏதாவது செஞ்சப்புறம், உள்ளூர்க்காரங்க எல்லாரும் பத்திரமா பதுக்கி வச்சப்புறம், நீங்க சட்டத் திருத்தம் கொண்டு வந்தா என்ன, கொண்டு வராட்டா என்ன...?







      Our Apps Available On




      Dinamalar

      Follow us