ஊழல் ஒழிப்புக்கு தீபம் ஏற்றி பிரசாரம்
ஊழல் ஒழிப்புக்கு தீபம் ஏற்றி பிரசாரம்
ஊழல் ஒழிப்புக்கு தீபம் ஏற்றி பிரசாரம்

சென்னை : ''பல்வேறு ஊழலில் சிக்கியுள்ள காங்.,க்கு, வரும் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும்.
இதில், மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கராத் பங்கேற்றுப் பேசியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ளது. பெரும் ஊழலில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரும், மத்திய அமைச்சர்களும் இருந்துள்ளனர். இந்த ஊழல்கள் காரணமாக, மக்கள் மீது வரிச் சுமை அதிகரித்துள்ளது. ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க வேண்டும். நடைபெற்ற ஊழல்கள் எல்லாம், பிரதமருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, பிரதமரையும் லோக்பால் சட்டத் திருத்த மசோதாவிற்குள் கொண்டு வரவேண்டும். தமிழக மக்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்; ஒருபோதும், ஊழலை அங்கீகரித்ததில்லை. ஊழல் காரணமாக, காங்கிரசுக்கு வரும் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும். மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். இவ்வாறு பிருந்தா கராத் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற அனைவரும் ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏற்றி ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


