Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முயற்சி மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுரை

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முயற்சி மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுரை

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முயற்சி மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுரை

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முயற்சி மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுரை

ADDED : ஜூலை 19, 2011 11:03 PM


Google News

திருப்பூர் : மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, தனித்தனியாக அக்கழிவை அப்புறப்படுத்த வேண்டும் என, மாநிலசுகாதாரத்துறை அரசு மருத்துவ மனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

நோயாளிகளை குணப்படுத்தவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆண்டுக்கு 80 கோடி ஊசி மற்றும் மருந்துகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 60 சதவீத ஊசிகள் தொற்றுநோய்உண்டாக்க கூடியதாக உள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.நோய் நீக்க கூடிய மருந்துகள் பயன்படுத்தப்பட்ட பின் முறையாக அகற்றப்படாமல் விடுவதே இதற்கு முக்கிய காரணம். இதனால் மஞ்சள் காமாலை போன்ற கொடிய தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு படுக்கைக்கு தோராயமாக 0.5 முதல் இரண்டு கிலோ வரை மருத்துவ கழிவு உருவாக வாய்ப்புள்ளதாக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கின்றன.ஒவ்வொரு மருத்துவமனையிலும் பெறப்படும் கழிவில் பத்து முதல் 15 சதவீதம் வரை உயிர் மருத்துவ கழிவாகவும், மீதி 85 சதவீதம் பொதுக்கழிவாகவும் உள்ளன. 15 சதவீத உயிர் மருத்துவ கழிவில் பத்து சதவீதம் தொற்றுவகை கழிவாகவும், மீதி ஐந்து சதவீதம் கெடுதல் விளைவிக்க கூடிய கழிவாகவும் உள்ளது. கழிவுகளில் மூலம் நோய் பரவுவதை தடுக்க, கழிவுகளை சேகரிக்கும் முறை குறித்து அனைத்து அரசு மருத்துவமனைக்கும் தமிழ்நாடு உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை திட்டம் சார்பில் அறிவுறுத்தி நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது; பணிபுரியும் சுகாதார மற்றும் துப்புரவு ஊழியர்கள் அதன்படி கழிவை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் துப்புரவு பணியாளர் அறை, அதிகளவில் கழிவு கொட்டப்படும் இடங்கள், மருத்துவமனை இதர பகுதிகளில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கழிவை அகற்றும் முறைகள்:திடக்கழிவு, பிளாஸ்டிக் குழல்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் குளுக்கோஸ் பாட்டில்கள்,நுண்ணுயிர் கழிவு, உயிர் தொழில் நுட்ப கழிவு போன்றவை தனியாக சிவப்பு வாளியில் போட வேண்டும். கூர்மையான கழிவு பொருட்கள், உடைந்த கண்ணாடி பொருட் கள், உடைந்த ஊசி, பிளேடுகள் மற்றும் தையல் போட பயன்படுத்தப்பட்ட கழிவுகளை தனியாக நீல நிற வாளியில் போட வேண்டும். மனித உடலுறுப்புகள், மனித திசுக்கள் மற்றும் பேறு காலத்தில் வெளிப்படும் கழிவுகளை மஞ்சள் வாளியில் போட வேண்டும். கழித்து ஒதுக்கப்பட்ட மருந்துகள், தீமை விளைவிக்க மருந்துகள் மற்றும் வேதியல் கழிவு களை கருப்பு வாளியிலும், மீதமுள்ள உணவு, பிளாஸ்டிக் பை, காகித பை, இலை மற்றும் தொற்று இல்லாத மாவுக்கட்டு கழிவை ஆகியவற்றை பச்சை வாளியில் போட வேண்டும், என நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us