/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/"அட்டன்ஷன்' உண்டு "ஸ்டண்டடீஸ்' இல்லை : நெருக்கடியில் மாணவிகள்"அட்டன்ஷன்' உண்டு "ஸ்டண்டடீஸ்' இல்லை : நெருக்கடியில் மாணவிகள்
"அட்டன்ஷன்' உண்டு "ஸ்டண்டடீஸ்' இல்லை : நெருக்கடியில் மாணவிகள்
"அட்டன்ஷன்' உண்டு "ஸ்டண்டடீஸ்' இல்லை : நெருக்கடியில் மாணவிகள்
"அட்டன்ஷன்' உண்டு "ஸ்டண்டடீஸ்' இல்லை : நெருக்கடியில் மாணவிகள்
ADDED : ஜூலை 23, 2011 09:43 PM
வேடசந்தூர் : வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இட நெருக்கடியால், மாணவிகள் பரிதவிக்கின்றனர்.
இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 2100 மாணவிகள் படிக்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வில், 2008-09 ல், இப்பள்ளி மாநில அளவில் மூன்றாம் இடத்தையும்; கடந்த ஆண்டு, பழநி கல்வி மாவட்ட அளவில், அரசு பள்ளிகளில் முதல் இடத்தையும் பெற்றது. போதிய இட வசதி இல்லாததால், மாணவிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
சத்துணவு கூடம் அருகே கழிப்பறை இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சைக்கிள்களை நிறுத்த இடம் இன்றி, ரோட்டருகே நிறுத்துவதால், திருட்டு தொடர் கதையாக உள்ளது.
இறை வணக்கத்திற்காக மைதானத்தில் கூடும் மாணவிகள், 'அட்டன்ஷன்' ல் மட்டுமே நிற்கமுடியும்; 'ஸ்டண்டடீஸ்' என, கூறினால், மாணவிகளால் நிற்க முடியாது. மதிய உணவு நேரத்தில் படும் அவதி சொல்லி மாளாது. தேர்வுகள் நடத்த கூட வசதியின்றி பாதிக்கப்படுகின்றனர். மாணவிகளின் நலன் கருதி, மாற்று இடம் தேர்வு செய்ய கல்வித்துறை முன்வர வேண்டும்.


