/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற தந்தைமகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற தந்தை
மகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற தந்தை
மகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற தந்தை
மகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற தந்தை
ADDED : ஜூலை 23, 2011 09:46 PM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகளை, காரை ஏற்றி கொல்ல முயன்ற தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அரு கே பாவாயூரைச் சேர்ந்தவர் சதீஷ் (27). இவர், காளாஞ்சிபட்டியை சேர்ந்த வேலுச்சாமியின் மகள் வளர்மதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெண் குடும்பத்தார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சதீஷ், மனைவி வளர்மதியுடன் இருசக்கரவாகனத்தில் பெயில்நாயக்கன்பட்டியிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றார். இதையறிந்த வளர்மதியின் தந்தை காரில் சென்று இருசக்கர வாகனத்தில் மீது மோதி இருவரையும் கொல்ல முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இரும்புக்கம்பியால் சதீஷையும் வளர்மதியையும், வேலுச்சாமி தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த இருவரும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, வேலுச்சாமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளார்.


