ADDED : ஜூலை 23, 2011 09:47 PM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே கோர்ட் உத்தரவை மீறி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூரைச் சேர்ந்தவர் சிக்கந்தர்பாட்சா (35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அப்துல் மஜீத், அப்துல் ரஹீம், ஜமால்முகமது ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இந்த வழக்கு ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு முடியும் வரை இந்த நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று கோர்ட் இடைகால உத்தரவு அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்துல் மஜீத், அப்துல் ரஹீம், ஜமால்முகமது மற்றும் அடியாட்கள் 10 பேர் பிரச்னைக்குரிய நிலத்தில் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.
கோர்ட் உத்தரவை மீறி சிலரின் தூண்டுதலின் பேரில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததுடன் அங்கிருந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சிக்கந்தர் பாட்சா புகார் செய்துள்ளார்.


