ADDED : ஜூலை 23, 2011 09:51 PM
பழநி : பாலசமுத்திரம் அருகே பெருமாள் என்பவரின் தோட்டத்து கிணற்றில், நேற்று காலை ஒரு ஆண் காட்டுப் பன்றி தத்தளித்துக் கொண்டிருந்தது.
பாரஸ்டர் சந்திரன் தலைமையிலான வனத்துறை, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு மணிநேர போராட்டத்திற்குப் பின், காட்டுப்பன்றி உயிருடன் மீட்கப்பட்டது. ரேஞ்சர் தர்மராஜ் கூறுகையில், '20 கிலோ எடையுள்ள ஏழுமாத காட்டுப்பன்றி குட்டி, தவறி கிணற்றில் விழுந்துள்ளது. மீட்கப்பட்ட பின், முதலுதவி அளிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது,' என்றார்.


