/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
சிவகங்கை : பட்டா மாறுதலுக்கு இனி வி.ஏ.ஓ.,க்களிடமும் விண்ணப்பிக்கலாம் என்ற அரசு உத்தரவை, காலிப்பணியிடங்களை நிரப்பி விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வேயர் ஒருவர் கூறுகையில், '' தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் நாங்களே செய்து வருகின்றோம். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டாக கோரிக்கை வைத்தும் கடந்த தி.மு.க., அரசு செவிசாய்க்கவில்லை. புதிய அரசு மேலும் கூடுதல் சுமையை சுமத்துகின்றனர். துணை தாசில்தார்கள், தாசில்தார்கள் பதவி உயர்வு அடிப்படையில் சென்றுவிட்டனர். உதவியாளர்களும் பணிஉயர்வு பெற்று சென்று விட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அடிப்படை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசு இந்த பணியிடங்களை நிரப்பாமல் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தவுடன் வழங்க முடியாது,'' என்றார்.


