/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பழுதடைந்த நூலக கட்டடம் மழையில் பாழாகும் புத்தகங்கள்பழுதடைந்த நூலக கட்டடம் மழையில் பாழாகும் புத்தகங்கள்
பழுதடைந்த நூலக கட்டடம் மழையில் பாழாகும் புத்தகங்கள்
பழுதடைந்த நூலக கட்டடம் மழையில் பாழாகும் புத்தகங்கள்
பழுதடைந்த நூலக கட்டடம் மழையில் பாழாகும் புத்தகங்கள்
ADDED : ஜூலை 23, 2011 10:11 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி நூலக கட்டடம் பழுதடைந்து புத்தகங்கள் மழையில் நனைந்து பாழாகிறது.
இந்நூலகம் 45 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகரத்தில் இயங்கும் ஒரே பொது நூலகம் இது தான். இங்கு 25 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.தினமும் நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர். நீண்ட காலத்திற்கு முன் பேரூராட்சி வழங்கிய சிறிய ஓட்டுக்கட்டடத்தில் நூலகம் இயங்குகிறது. மேற்கூரை பழுதடைந்து மழை பெய்தால் புத்தகங்கள் நனைந்து வீணாகும நிலை தான் தற்போதும் உள்ளது. சுவர், தரைத்தளம்மோசமாக உள்ளது. வாசகர்கள் அமர்ந்து படிக்க போதுமான இட வசதில்லை. சுற்றுச் சுர் இல்லாததால் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளும் இங்கேயே கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில்இயங்கும் நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றவும், எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில் புதிய நூலக கட்டடம் கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


