Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் தரம் உயர்த்த ரூ.43.35 கோடியில் திட்டம்

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் தரம் உயர்த்த ரூ.43.35 கோடியில் திட்டம்

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் தரம் உயர்த்த ரூ.43.35 கோடியில் திட்டம்

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் தரம் உயர்த்த ரூ.43.35 கோடியில் திட்டம்

ADDED : ஜூலை 24, 2011 12:56 AM


Google News

கன்னியாகுமரி : சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கு 43 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் கூறினார்.ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 43 கடலோர மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரகணக்கான மீனவர்கள் விசைப்படகு மற்றும் வள்ளம், கட்டுமரங்களில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடலரிப்பு, கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஆண்டிற்கு பல மாதங்கள் மீன்பிடி தொழில் முடக்கம் ஏற்படுகிறது. கடல்சீற்றம் மற்றும் கடலரிப்பில் இருந்து மீனவ கிராமங்களை பாதுகாக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கடலரிப்பு தடுப்புசுவர் மற்றும் தூண்டில் வளைவுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.



ஆனால் பல இடங்களில் தூண்டில் வளைவு பாலம் சேதமடைந்துள்ளதால் மீன்பிடி தொழில் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மீனவ மக்களிடையே கருத்து உள்ளது. எனவே சேதமடைந்த தூண்டில் வளைவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றும் புதிதாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து நீரோடி வரையிலான கடலோர கிராமங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், வனத்துறை அமைச்சர் பச்சைமால் ஆகியோர் நேற்று காலை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். சிறிதுநேர ஓய்வுக்கு பின்னர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்தனர்.



பின்னர் அமைச்சர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:-சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை உலக தரத்திற்கு உயர்த்த தமிழக அரசுக்கு 43 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, கழிவுநீர் ஓடை, 5 உயர் கோபுர மின்விளக்குகள், தனியாக டிரான்ஸ்பார்மர், காங்கரீட் சாலை வசதி, ஜெனரேட்டர் வசதி, துறைமுகத்தை ஆழ்படுத்தும் சிறிய கப்பல்,போன்ற வசதிகள் செய்யப்பட உள்ளது. குளச்சல், மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் திருப்திகரமாக இல்லை என்று பொதுமக்களிடம் இருந்து தமிழக முதல்வருக்கு புகார்கள் வந்துள்ளது. அதனடிப்படையில் இரு துறைமுகங்களை மறுஆய்வு செய்வதற்காக புனேவில் உள்ள நிபுணர் குழு மூலம் மறு ஆய்வு செய்வதற்காக 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



இதில் தேங்காப்பட்டணம் துறைமுக பணிகளுக்காக 43 கோடியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலங்கள் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. எனவே சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும் தேவையான இடங்களில் புதிய தூண்டில் வளைவு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட அமைச்சர்கள், கன்னியாகுமரி பெரிய நாயகி தெருவில் அமைக்கப்பட உள்ள தூண்டில் வளைவு பாலம், மற்றும் கோவளம், கீழமணக்குடி ஆகிய இடங்களில் உள்ள தூண்டில் வளைவு பாலங்களை ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது தமிழக மீன் வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார், முருகேசன் எம்.எல்.ஏ, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் புரூஸ், பொதுபணித்துறை செயற்பொறியாளர் மலையரசன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தம்பித்தங்கம், கன்னியாகுமரி பஞ்., துணை தலைவர் வின்ஸ்டன், பாசறை செயலாளர் எழிலன், ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் சகாயம், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முத்துமாணிக்கம், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ், வக்கீல் அணி செயலாளர் பால ஜனாதிபதி, கண்ணன், வேலு, அன்பையா, சங்கர் , பி.ஆர்.ஒ அரிராம், காட்டுபுதூர் பஞ்., தலைவர் பொன். சுந்தர் நாத், வடிவை மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us