/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணிஎம்.ஜி.ஆர். சிலை சிக்னலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணி
எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணி
எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணி
எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணி
ADDED : ஜூலை 24, 2011 12:57 AM
ஈரோடு: ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் பகுதியில் 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி நடக்கவுள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே எம்.ஜி.ஆர்., சிக்னல் பகுதியில், 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, பிரப் ரோடு, அரசு மருத்துவமனை ரோடு ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்படுத்தப்படுகிறது. எம்.ஜி.ஆர்.சிலை சிக்னல் அருகே இரண்டு கோடி ரூபாய் செலவில் முட்டை வடிவ பூங்கா அமைக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர்., சிலை பகுதியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் நேற்று பார்வையிட்டார். மேம்பாட்டு பணி மேற்கொள்ளும் இடங்கள், பூங்கா ஆகியவற்றின் வரைபடங்களை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் காமராஜ், எஸ்.பி., ஜெயச்சந்திரன், பொதுப்பணித்துறை கோட்டப் பொறியாளர் (திட்டம்) தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


