Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/அமெரிக்க - இந்திய மாணவ மாணவியர் கலாசார கலந்துரையாடல்

அமெரிக்க - இந்திய மாணவ மாணவியர் கலாசார கலந்துரையாடல்

அமெரிக்க - இந்திய மாணவ மாணவியர் கலாசார கலந்துரையாடல்

அமெரிக்க - இந்திய மாணவ மாணவியர் கலாசார கலந்துரையாடல்

ADDED : ஜூலை 24, 2011 12:59 AM


Google News

நாகர்கோவில் : அமெரிக்கா நாட்டின் ஏதென்ஸ் இன்ட்ராக்ட் கிளப் மாணவிகளும், நாகர்கோவில் இன்ட்ராக்ட் கிளப் மாணவிகளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டு சுனாமி தாக்கிய பின்னர் அமெரிக்காவில் உள்ள ஏதென்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ஏராளமான தொண்டர்கள் வந்தனர். அதோடு பள்ளம் பகுதியில் மாணவ மாணவியர், பொதுமக்களின் வசதிக்காக அனைத்து வசதிகளும் கொண்ட லைபிரரி அமைக்க வேண்டுமு என கோரிக்கை விடப்பட்டது. இதன்படி அமெரிக்கா நாட்டின் ஏதென்ஸ் பகுதியில் உள்ள இன்ட்ராக்ட் கிளப் மாணவ மாணவியர் சேகரித்த பணத்தில் பள்ளம் புனித யூதா ததேயு பள்ளியில் 20 லட்சம் ரூபாயில் லைபிரரி அமைக்கப்பட்டுள்ளது.



ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் சார்பில் இந்த பணிகள் நடைபெற்றன. பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள லைபிரரிக்கு புத்தகங்கள் வழங்கவும், லைபிரரியின் செயல்பாடுகளை பார்வையிடம் ஏதென்ஸ் இன்ட்ராக்ட் கிளப் மாணவ மாணவியர் வந்துள்ளனர். கிளப் தலைவர் வாட்சன், பள்ளி ஆசிரியர் மார்கரெட் ஆகியோர் தலைமையில் 8 மாணவ மாணவியர் வந்துள்ளனர். அவர்கள் லைபிரியை பார்வையிட்டனர். அவர்களுக்கு நாகர்கோவில் ரோட்டரி கிளப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் சுனில் ரிச்சர்ட்சன், முன்னாள் தலைவர் ஜெஸிந்தா தர்மா, தர்மா, கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட், சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, ஜோசப் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளின் இன்ட்ராக்ட் கிளப் மாணவ மாணவியர் அமெரிக்கவில் இருந்த வந்த இன்ட்ராக்ட் கிளப் மாணவ மாணவியருடன் கலந்துரையாடினர். அப்போது இரு நாட்டு இன்ட்ராக்ட் கிளப் கொடிகளையும் பறிமாறிக்கொண்டனர். அதோடு கலாச்சாரம், பண்பாடு, இன்ட்ராக்ட் கிளப் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களையும் பறிமாறினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us