Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.4.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.4.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.4.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.4.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

ADDED : ஜூலை 24, 2011 01:02 AM


Google News

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, 4.78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.ஏ., பாஸ்கர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சமூக நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., ராமசாமி தலைமை வகித்தார். தாசில்தார் திருஞானம், முடநீக்கியல் நிபுணர்கள் சேகர், ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குவதற்காக, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. அவர்களை மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக பரிந்துரை செய்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள், அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்காக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சிறப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, 2010-11ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன்படி, 158 பயனாளிகளுக்கு, 4.78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., பாஸ்கர் வழங்கினார். அதில், மூன்று, நான்கு சக்கர வண்டிகள், ஊன்றுகோல், கண்ணாடி, காதொலிகருவி உள்பட, 213 உபகரணங்கள் வழங்கப்பட்டது. தற்போது நடந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், அனைத்துத்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us