Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விசைப்படகு தொழிலாளர்கள் 3வது நாளாக ஸ்டிரைக்மீன் விலை கிடுகிடு உயர்வு

விசைப்படகு தொழிலாளர்கள் 3வது நாளாக ஸ்டிரைக்மீன் விலை கிடுகிடு உயர்வு

விசைப்படகு தொழிலாளர்கள் 3வது நாளாக ஸ்டிரைக்மீன் விலை கிடுகிடு உயர்வு

விசைப்படகு தொழிலாளர்கள் 3வது நாளாக ஸ்டிரைக்மீன் விலை கிடுகிடு உயர்வு

ADDED : ஜூலை 24, 2011 01:06 AM


Google News

தூத்துக்குடி : பொது பஞ்சாயத்து அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தொடர்ந்து 3வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திரேஸ்புரத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிர் இழந்தனர்.

அவர்களின் உடலை மீட்கும் பணி நடக்கும் போது விசைப்படகு கடலுக்குள் சென்றால் கடலில் சிக்கியுள்ள உடல்கள் சேதம் அடையும் என்பதால் சக மீனவர்கள் என்ற முறையில் விசைப்படகு தொழிலாளர்கள் சார்பில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்று கூறப் படுகிறது.



இதில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டினர். மேலும் விசைப்படகு தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த தலைவர் பார்த்தீபன் மற்றும் செயலாளர் ஜேசு ஆகிய இருவரையும் இனிமேல் எந்த விசைப்படகிலும் கடலுக்குள் அழைத்துச் செல்ல வேண்டாம் என்று டிஜிட்டல் போர்டும் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், பொதுப்பஞ்சாயத்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுவருகின்றனர். விø சப்படகு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சுமார் 250 விசைபடகுகளும் நேற்று மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மீன்விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us