ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
திருவேங்கடம் : கீழவயலி கற்பகவிநாயகர் மற்றும் வடகாசியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது.கீழவயலி கற்பக விநாயகர் மற்றும் வடகாசியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா முதல் நாள் மாலை கணபதி பூஜையுடன் துவங்கியது.
பின் எஜமான வர்ணம், சங்கல்பம், புண்யாவாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மருத்சங்கருவீரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், ருத்ரஜெபம், லட்சுமி, துர்க்கா ஹோமம், வேதாபாராயணம், தேவாரம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.இரண்டாம் நாள் அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் யாகசாலை பூஜைகள், தேவாரம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பின் கடம்புறப்பாடு, புதிய கோபுர கலசங்கள், கற்பகவிநாயகர், வடகாசி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கீழவயலி விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.