/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கம்பன் கழக பேச்சு போட்டி; மாணவர்கள் அசத்தல்கம்பன் கழக பேச்சு போட்டி; மாணவர்கள் அசத்தல்
கம்பன் கழக பேச்சு போட்டி; மாணவர்கள் அசத்தல்
கம்பன் கழக பேச்சு போட்டி; மாணவர்கள் அசத்தல்
கம்பன் கழக பேச்சு போட்டி; மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 24, 2011 02:26 AM
திருப்பூர் : திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி லயன்ஸ் கிளப் வளாகத்தில் நேற்று நடத்தது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பேச்சு போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்; கம்பன் கண்ட மாணவ ராமன், குகனின் அன்புள்ளம் ஆகிய தலைப்புகளில் பேசினர்.
பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா மாணவி மவுனிகா முதலிடம், விவேகானந்தா வித்யாலயா மாணவி தெய்வநாயகி இரண்டாமிடம், ஸ்ரீதேவி வித்யாலயா மாணவி புகழலரசி மூன்றாமிடம் மற்றும் கே.எஸ்.சி., அரசு பள்ளி மாணவன் முத்துசெல்வன் நான்காமிடம் வென்றனர். இன்பென்ட் ஜீசஸ் மாணவி பூமதி, விவே கானந்தா வித்யாலயா மாணவி சர்மிளா, ஸ்ரீதேவி வித்யாலயா மாணவி சுமித்ரா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில், எட்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கம்பன் கவி இன்பம், சுக்ரீவன் நட்பு ஆகிய தலைப்புகளில் பேசினர்; செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவி சுகன்யா முதலிடம், சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவன் சந்தோஷ் குமார் இரண்டாமிடம், உடுமலை அரசு கல்லூரி மாணவன் வீரமணி மூன்றாமிடம் பெற்றனர். ஆசிரியர்களுக்கான @பாட்டியில் இன்பென்ட் ஜீசஸ் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியா மேரி முதலிடம், சக்தி விக்னேஷ் பள்ளி ஆசிரியர் கோவிந்தன் இரண்டாமிடம், கலைமகள் பள்ளி ஆசிரியர் ரமிஜாபோகம் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


