ADDED : ஜூலை 24, 2011 03:36 AM
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே, அரசு பஸ் பைக் மீது மோதிய விபத்தில் கணவன்,
மனைவி பரிதாபமாக இறந்தனர்.திருவேற்காடு, பாடசாலையைச் சேர்ந்தவர் கணேசன்,
50.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லட்சுமி, 45.
இருவரும், நேற்று காலை பூந்தமல்லியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக,
பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி டிரங்க் சாலையில், கல்லறை பஸ்
ஸ்டாப் அருகே வந்த போது, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு
பஸ், இவர்கள் பைக் மீது மோதியது.நிலைதடுமாறி கீழே விழுந்த இருவர் மீதும்,
பஸ் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்,
வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் சேகரை கைது செய்தனர்.